• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காவல் துறையினரால் புதுப் பொலிவு பெற்ற தென்காசி ரயில்வே மேம்பாலம்!

தென்காசி ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தற்போது அந்த மேம்பாலத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் பல்வேறு அரசியல் , மதம், ஜாதி மற்றும் இதர நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி பொழிவற்ற நிலையில்  காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மேம்பாலத்தை சீர் படுத்தி பொதுமக்களை கவரும் வகையில், வண்ணமயமாக மாற்றி அசத்தியுள்ளனர்.

மேலும் மக்களுக்கு உந்துதல் அளிக்கும் வகையில், பல வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் மேம்பாலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது..