• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விக்கி-நயன் திருமணத் தேதி தெறிஞ்சிடுச்சா..?

Byகாயத்ரி

Jan 1, 2022

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் திருமணங்கள் அதிகம் நடந்து வருகிறது. கொரோனா காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்து எல்லோரின் திருமணமும் மிகவும் சிம்பிளாக நடந்து வருகின்றன.

அப்படி பிரபலங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை தான். நெற்றிக்கண் பட புரொமோஷனில் கலந்துகொண்ட நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக அறிவித்தார்.நிச்சயதார்த்தத்தை போல நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணமும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நடந்துவிடும் என்கின்றனர் சிலர்.இந்த நிலையில் துபாயில் இருக்கும் விக்னேஷ் சிவன் தனது அறையில் இருந்து வெளிப்பக்கம் உள்ள அழகை வீடியோவாக பதிவு செய்தார்.

அதற்கு அடுத்த பதிவில், 2.22.22 இந்த நாளில் திருமணம் செய்தால் நன்றாக இருக்குமே, இதை ஏன் மிஸ் செய்ய வேண்டும் என போட்டுள்ளார்.உடனே ரசிகர்கள் இதுதான் அவர்களின் திருமண நாளாக இருக்குமோ என ஆர்வத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.