• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டசபைக்குள் வரும் முன் கொரோனா பரிசோதனை

Byகாயத்ரி

Jan 1, 2022

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் தலைமைச் செயலகத்திலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான், பேரவை மண்டபத்துக்குள் செல்ல முடியும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபை 5-ந்தேதி தொடங்க இருப்பதையொட்டி அங்கு முதல்-அமைச்சர் ஆலோசிக்கும் அறை, எதிர்க்கட்சி தலைவருக்கான அறை, எம்.எல்.ஏ.க்களுக்கான அறையும் தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்டு அந்த பணியும் முடிவுறும் தருவாயில் உள்ளது. சட்டசபை வளாகமே வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவாக்கப்பட்டு வருகிறது.