• Sat. Apr 27th, 2024

விவசாயி சாந்தியிடம் உரையாடிய பிரதமர் மோடி

Byகாயத்ரி

Jan 1, 2022

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை திட்டத்தின் கீழ் 10-வது தவணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதையொட்டி விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இணை செயலாளர் ஷோமிதா பிஸ்வாஸ், கலெக்டர் கார்மேகம் மற்றும் இந்த நிறுவனத்தின் 5 இயக்குனர்கள், 30 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நபார்டு வங்கி ஆகியவற்றின் எண்ணை வித்துகளில் இருந்து எண்ணை பிழிதல், மாவு தயாரிப்பு ஆகிவற்றில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.18.28 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

இதற்காக அதன் இயக்குனர் விவசாயி சாந்தி மற்றும் அவரது குழுவில் உள்ள பெண் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். விவசாயி சாந்தியை பாராட்டி பேசிய பிரதமர் மோடி அவரை முன்னுதாரணமாக கொண்டு பெண்கள் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *