நவ.29, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக பாஜக ஆதரவு தந்துள்ள நிலையில், தாங்களே தோண்டி வைத்த பள்ளத்தில் திமுக விழுந்து விட்டது என்றும் திமுகவிற்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரை பாண்டி கோவில் அருகே மதிமுக மாவட்ட செயலாளர் இல்ல விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. பல ஆண்டுகளாக தர்காவுக்கு பக்கத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. மரபுகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்து இருக்கிறது என்றார்.

மேலும், இந்துத்துவா சக்திகள் தீபத் தூண் உச்சியில் தீபம் ஏற்றியது மிகவும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்ற அவர்,
இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்கின்ற இந்த மதுரை பகுதியில் அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வேளையில் ஈடுபட்ட சக்திகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்றார்.
தீபச்சுடர் ஏற்றி வைத்தது மிகத்தை வருத்தத்தை தருகிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனக்கு மனதுக்கு தோன்றியதையெல்லாம் தீர்ப்பாக தந்து வருகின்றனர். ஆனாலும், நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக பாஜக ஆதரவு தந்துள்ளது என்ற.அவர்,
தாங்களே தோண்டி வைத்த பள்ளத்தில் திமுக விழுந்து விட்டது என்றும் திமுகவிற்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது என்றும் கூறினார்

மேலும், தேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் சோனியா ராகுல் மம்தா பானர்ஜி சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,
யார் யாரைப் பார்த்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றும் வைகோ தெரிவித்தார்.


