• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கொடை ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி..,

ByPuthar Pandian P

Nov 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் கார்த்திகை மார்கழி தை ஆகிய மாதங்களில் சாலை ஓரத்தில் சீசன் பல கடைகள் அமைப்பது செயல்படும் வழக்கம்
கடந்த சில நாட்களாக கொடை ரோட்டில் சீசன் பழக்கடைகள் ஐயப்பா பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழங்கள் விற்பனை படுதோராக நடக்கிறது.

அதே போல அய்யப்ப பக்தர்கள் வரும் பஸ் சுற்றுலா வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தி பழங்கள் வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கொடை ரோட்டில் பஸ் நிலையம் ரெயில்வே நிலையம் இருப்பதால் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு
ஒருபுறம்சாலையிலேயே அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் , மறுபுறம் சாலையில் அரசு மதுபான கடையும், தனியார் மதுபான பார் செயல்படுவதால் அதிகமான மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கும் அவல நிலை நீடிக்கிறது,

சீசன் பழக் கடைகள் முடிந்த பிறகு கொடை ரோட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீண்ட வரிசையில் வாகனங்கள் சாலையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலைபாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.