• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சின்னமனூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலம்..,

தேனி மாவட்டம் சின்னமனூரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் கொண்டாடப்பட்டது.

சின்னமனூர் ரவுண்டானா பகுதியில், சின்னமனூர் நகர தி.மு.க. சார்பில் இந்த பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடினர்.

பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கேக் வெட்டும் நிகழ்ச்சி மட்டும் இல்லாமல், மனிதநேயத்தோடு கூடிய சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற கட்சி நிர்வாகிகள், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவருக்கும் பிரட் மற்றும் பழங்கள் வழங்கி, அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வு அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பிறந்தநாள் விழா நிகழ்வில், சின்னமனூர் நகரச் செயலாளர் முத்துக்குமார்,
சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், 3-வது வார்டு செயலாளர் மோகன், வார்டு கவுன்சிலர் அமீன்,
இளைஞரணி அமைப்பாளர்கள் இஸ்மாயில், கார்த்திக், தொண்டரணி அமைப்பாளர்கள் அஜித், ரகுமான் ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சின்னமனூரில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா, கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.