விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.

காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் பெறப்பட்ட மது பாட்டில்கள் 100க்கும் மேற்பட்ட மூடைகளில் மலை போல் குவிந்துள்ளது. காலி மதுபாட்டில்களை வழக்கம் போல் விலைக்கு வாங்க வருபவர்கள் வாங்க வராததால் காலி மதுபாட்டில்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால் காலி மது பாட்டில்கள் வெயில் தாங்காமல் உடைந்து சேதமடைந்து வருகின்றன.
இதனால் அப்பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக துர்நாற்றம் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திரும்ப பெற்ற காலி மதுபாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


