திருவண்ணாமலை ஆதீன கர்த்தர் கருணாநிதி சுவாமிகள் தமிழக முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டகால விருப்பமாகும். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது பக்தர்களின் மனதில் மிகுந்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியதாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனத்தில் காட்டிய பக்தியையும், முதல்வராகப் பொறுப்பேற்றபோது பக்தர்கள் கொண்ட மகிழ்ச்சியையும் நினைவுகூர்கிறேன். ஆனால், இந்துக்களின் பெரும்பான்மையான பக்தர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் அரசு மதிக்காதது வருத்தமளிக்கிறது.

மதச்சார்பற்ற அரசு என்பது அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமையும் மரியாதையும் வழங்கும் அரசாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் தமிழக அரசும் பரஸ்பர மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளித்து, மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்.
எனவே, தமிழக முதல்வர் முருக பக்தர்களின் மனவேதனையைப் புரிந்துகொண்டு, அனைத்து மதத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட வேண்டும்.
இந்து தர்மம், சனாதன தர்மம் காக்கப்பட வேண்டும்; தமிழக அரசு அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசுக்கு திருவண்ணாமலை ஆதீனம் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.


