• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான நிகழ்ச்சி..,

ByS. SRIDHAR

Nov 26, 2026

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியினர் தேசியத் தலைவர் எனக் குறிப்பிடும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியினரின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கப்பட்டது. மருத்துவமனையின் குருதிப் பிரிவு தலைமை மருத்துவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 20 இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.