• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தாயில்பட்டியில் உலக கழிப்பறை தினம்..,

ByK Kaliraj

Nov 26, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நாடார் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.

கழிப்பறை பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்பதை அனைவரும் உணர வேண்டும் ஊராட்சியை சுகாதாரமாகவும் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் முன்வர வேண்டும், வீடுகளில் தனிநபர் கழிப்பறை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்திய பிறகு துர்நாற்றம் இல்லாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பொது கழிப்பறையை வீட்டு கழிப்பறை போன்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, ,டைபாய்டு உள்ளிட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கழிப்பறையை அனைவரும் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் சம்பத் சீனிவாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசன் பானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜ், தாயில்பட்டி ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.