விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த துரைச்சாமிபுரம் கிராமத்தில் ராஜ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு ராஜ காளியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ,உள்ளிட்ட 11 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் சொக்கப்பன் கொழுத்தப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது


