இந்திய அரசமைப்பு சட்டநாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பாக, புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாநகர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலைக்கு அருகே.தொடர்ந்து இந்திய அரசமைப்பின் முகப்புரையை முன்வைத்து, மக்கள் தேசம் கட்சி சார்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மக்கள் தேசம் கட்சியின் மாவட்டச் செயலாளர் தெம்மாவூர் நந்தன் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் கறம்பக்குடி மோகன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபூபதி, மாநில துணைச் செயலாளர்கள் ரெ.கருணாநிதி, M.தேவன், மாவட்ட பொருளாளர் கருப்புசாமி உள்ளிட்ட மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்துகொண்டனர்



