மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ஓபிசி பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட 256 சமூகங்களின் கல்வி வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான இட ஒதுக்கீட்டின் குளறுபடிகள் தொடர்ந்து வரும் நிலையில் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட இருக்கிற ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ பி சி என்ற பட்டியல் இடம் பெறவில்லை.

ஆகவே ஓபிசி மக்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் அரசியல் அங்கீகாரம் பெற முடியாத பெரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் குடியரசு தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் எதிர்வரும் 28 11 2026 புதன்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஓபிசி ரைட்ஸ் மற்றும் ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி சார்பில் மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் சமூக நீதிக் காவலர் அய்யா வெ ரத்தின சபாபதி அவர்களின் தலைமையில் அனைத்து மாநிலத்திலும் இருந்து (அகில இந்திய ஓபிசி ரைட்ஸ்) பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் இன்று காலை புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 25க்கும் மேற்பட்ட வர்களும் திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 25க்கு மேற்பட்டவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர்கள் அனைத்து சமூக மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்கள் இதே போல் கோவை ஈரோடு கரூர் தேனி திருவள்ளூர் சென்னை திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் சிவகங்கை திண்டுக்கல் மதுரை விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களின் சார்பில் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அனைவரும் புதுடெல்லி நோக்கி பயணம் செய்தனர்.
இந்நிகழ்வில் மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா இரா வெங்கடேசன் பெருமாள் உடையார் சின்னத்தம்பி யாதவ் ஆசிரியர் முத்துக்கருப்பன்
எஸ் பி ஆறுமுகம் டாக்டர் சீனிவாசன் ஆலங்குடி ராமச்சந்திரன் நந்தகுமார்
செல்ல விக்னேஷ் சுடலை கணேஷ் ஆலங்குடி கருப்பையா மணிமுத்து ஆகியோர் சென்றனர்.


