• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடை பணியாளர்கள் பாடல்கள் பாடி நூதன ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 23, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில், ரேஷன் கடை காலிப்பணியிடங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் மூலம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி நிரப்ப வேண்டும் என்றும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பாடல்களைப் பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.