சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலபாக்கத்தில் உள்ள கபிலன் நெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பி.எப்.பி.எல் (PFPL) மூன்றாவது சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த செப்டம்பர் மாதம் அன்று முன்னாள் பா.ஜ.க பொது குழு உறுப்பினர் முத்துராஜ் அவர்கள் தொடஙகி வைத்தார்,

வாரம் ஞாயிற்றுகிழமை என நான்கு வாரங்கள் நடைபெற்ற இப்போட்டியில் வீ.தி லீடர்ஸில் இனைந்த இளைஞர்கள் நான்கு அணிகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் இன்று கிரிகெட்டுக்கான இறுதி போட்டி வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட நலம்பாக்கம் பகுதியில் உள்ள வாஹி குரு கிரிக்கெட மைதானத்தில் நடைபெற்றது,
இதனை வீ,தி,லீடர்ஸ் அமைப்பின் பொது செயலாளர் கரு நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி போட்டியை தொடஙகி வைத்தார்,

தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழஙகபட்டது,
பின்பு பேட்டியளித்த கரு நாகராஜன்,
சென்னை பொருத்தவரை வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீ,தி,லீடர்ஸ் சார்பில் 200 வார்டுகளிலும் கிரிக்கெட்,வாலிபால்,கபடி போட்டிகளை நடத்தவுள்ளோம்,இளைஞர்களை ஊக்கவிப்பது,மட்டுமல்லாமல் அவர்களிடைய ஆரோகியத்திற்க்கும் ,சுகாதாரத்திற்க்கும்,திறமைக்கும் களமாக அமைந்தது,ஆகவே இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு போட்டிகளை ஊக்கபடுத்துவது எங்களின் கடமை என்று தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்,

‘காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் ,அண்ணமலை அவர்களை ஆர்.எஸ்.எஸ். முகமூடி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது’
அப்போது மாணிக்கம் தாக்கூர் தி.மு.கவின் முகமுடியா ,காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ்நாட்டில் ஏதாவது கொள்கை உள்ளதா என்று கூறுங்கள் நான் மொட்டை அடித்து கொள்கிறேன், திமுகவின் ஊதுகோலாக செயல்பட்டவர்கள் காங்கிரஸ் ,திமுகவிற்க்கு ஜால்ரா அடிப்பது மட்டுமல்லாமல் விஜய்யையும் ஜால்ரா அடிக்க வைக்க பாத்கிறார்கள் இதன் உங்கள் சதிதிட்டம்,
திருப்பரங்குன்றம் கோவில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இடைக்கால உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மாணிக்க தாக்கூர் பதிவு செய்து வருகிறார்,அவர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்,

திமுக,காங்கிரஸ்,திருமாவளவன்,
கம்யூனிஸ்ட் மதரீதியாக செயல்படுகிறார்கள்,தேர்தல் நேரத்தில் மட்டும் சிதம்பரம் கோவிலுக்கு சென்று பட்டை அடித்து கொள்கிறார்கள். அரசியல் நேரத்தின் போது நாட்க கலைஞர்களாக மாறிவிடுகிறார்கள்,மற்ற நேரஙகளில் இந்துகளை வஞ்சுகிறார்கள்,
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சாய் சத்தயன் மற்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


