• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் பயாண்ட் மீடியா சார்பாக மெடிக்கான் எனும் மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி..,

BySeenu

Nov 21, 2026

கோவையில் செயல்பட்டு வரும் பயாண்ட் (BUOYANT) மீடியா சார்பாக பல்வேறு துறை தொடர்பான கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..

இந்நிலையில் பயாண்ட் மீடியா சார்பாக நான்காவது எடிஷன் மெடிக்கான் எக்ஸ்போ எனும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கிது…

நவம்பர் 20,21,22 ந்தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள, மெடிக்கான் எக்ஸ்போ கண்காட்சி துவக்க விழா பயாண்ட் மீடியா நிர்வாக இயக்குனர்கள் சுந்தரமூர்த்தி,ஹேமா சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..

இதில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்,பி.எஸ்.ஜி. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன்,,இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் டாக்டர் ரவிக்குமார் ,தலைவர் கோஷல் ராம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்..

மருத்துவத் துறையில் அறிமுகமாகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை ஒரே இடத்தில் பார்வையிடவும், மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்குள் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தக் கண்காட்சி வாய்ப்பாக அமையும்.

கண்காட்சியில்,மருத்துவத் துறை தொடர்பான நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் தொடர்பாக 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன..

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், மருத்துவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் சந்தித்து புதிய சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும்,. குறிப்பாக புதிய மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும்,உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு இடையே தொடர்பை உருவாக்குவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கண்காட்சி துவக்க விழாவில் பல்வேறு சிறப்பு மருத்துவர் நிபுணர்கள் ஸ்ரீ ராமலிங்கம், பரமேஸ்வரன் ,கார்த்திகேயன் ராஜு யுவராஜன் அன்னபூரணி பாலாஜி ,லியோ பெர்னார்ட்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.