• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் கட்டுமானம் தொடர்பான பில்டு எக்ஸ்கான் 2.0 கண்காட்சி..,

BySeenu

Nov 21, 2026

கோவையில் அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்கள் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது..

இதற்கான துவக்க விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை அமைச்சர் திரு V. சம்பத்குமார் அவர்களும் மற்றும் பேராசிரியர் முனைவர் பொறியாளர் திரு L.S. ஜெயகோபால் நிர்வாக இயக்குனர் மித்ரன் ஸ்ட்ரக்சர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு K.S. ஸ்ரீ கிரி பிரசாத் அவர்களும், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு N.M. சுகுமார் அவர்களும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி R.D. கனிமொழி சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்…

பில்ட் எக்ஸ்கான் 2.0 எனும் தலைப்பில்,நவம்பர் 20 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில்,130 மேற்பட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து துறையினர் அரங்குகள் அமைத்துள்ளனர்..

குறிப்பாக கட்டுமான துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில் நுட்பம் தொடர்பான அரங்குகள், இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட் மற்றும் மார்பிள் கற்கள், நவீன மின்சாதனங்கள், இயற்கை கட்டுமானம், நவீன பயோ செப்டிக் டேங்க்,
பழுதடையாத நவீன நிலத்தடி நீர்தேக்கத்தொட்டி, புதுமையான லிப்ட்கள்,புதிய வகை தரைத்தள டைல்ஸ் கற்கள் மற்றும் வீட்டு உள்அலங்காரப் பொருட்கள்
போன்ற காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை,காட்சியா (CODCEA) தலைவர் இராமலிங்கம்,செயலாளர் மணிகண்டன்,பொருளாளர் கவிராஜ், மற்றும் பில்டு எக்ஸ்கான் கண்காட்சி தலைவர் தங்கவேல்,,செயலாளர் திருமூர்த்தி,பொருளாளர் சேனாதிபதி, காட்சியா மக்கள் தொடர்பு அலுவலர் டேனியல், பில்டு எக்ஸ்கான்
மக்கள் தொடர்பு அலுவலர் குமாரவேல்,மற்றும் நிர்வாக அலுவலர் பிரவீன் குமார் ர் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்…

காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…