• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான்

சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல்.

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 44 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே பயிற்சி பள்ளியில் 34 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், குழு பரவல் ஏற்பட்டுள்ளது என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.