தென்காசி மாவட்டம், போகநல்லூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் 50 ஆண்டுக்கும் மேலாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி , கல்லூரி மற்றும் மருத்துவ தேவைக்காக வெளியூர் செல்வதற்காக பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் இன்று போகநல்லூரில் இருந்து கடையநல்லூர் வரை செல்லும் புதிய வழித்தடத்தை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் யூனியன் சேர்மன் சுப்பம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டிமணிகண்டன்,யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.