நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழக அமைச்சர்கள், நிர்வாகிகளை தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசி வீடியோ வெளியிட்டுவருகிறார்.

தங்களதுகழக நிர்வாகிகளை அவதூறாக பேசி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மதுரை தெற்கு மாவட்ட தலைமை பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ்வரன்,அலெக்ஸ், பிரவீன், மருது,ஸ்ரீகாந்த் ஆகியோர் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பனிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தவெக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
