மதுரை அல்-அமீன் நகரில், அல்-அமீன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அல்-அமீன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஹாஜி.முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார்.

மதுரை வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ஹாஜி.முகமது இதிரிஸ், ஹாஜி முகமது அய்யூப், புலவர் முகைதீன்பிச்சை, திருப்பாலை டி4 காவல்நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதா, மதுரை மாநகராட்சி கண்ணானேந்தல் 8-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதிகா கெளரிசங்கர், அல்-அமீன் நகர் குடியிருப்போர் நலச்சங்கச் செயலாளர் அப்பாஸ், பி.எஸ்.என்.எல் பரமன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காவல்துறை சார்பு ஆய்வாளர் புவனேஷ்வரி, வன அலுவலர் சதீஷ், கமால் கனி, அபுதாஹீர், செய்யது உஸ்மான், ஜகரிய்யா மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முத்துச்சாமி அவர்கள் நன்றியுரையாற்றினார். 125 மரக்கன்றுகள் நடப்பட்டன.