மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்ற இளைஞர்.,
உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ படிப்பில் சேர்ந்து ஒரு மாதம் சென்றதாகவும் பின்பு கல்லூரி செல்லாமல் குடும்ப சூழல் காரணமாக தந்தையுடன் திருப்பூரில் வேலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.,

இந்த நிலையில் மன உளச்சலில் இருந்த இளைஞர் நேற்று முன் தினம் தனது கிராமத்திற்கு வந்த நிலையில் தாடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பம் மரத்தில் காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

சம்பவம் அறிந்து விரைந்து வந்த எழுமலை போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,