• Wed. Nov 18th, 2026

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளை இந்த அரசு குறைத்துக் கொண்டே வருகிறது-ரகுபதி ஆவேசம்..,

ByS. SRIDHAR

Nov 18, 2026

புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி,

ஏற்கனவே நான் தான் கூறினேன் தமிழக வெற்றிக் கழகத்தில் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்று தற்போது 60 முதல் 70 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் அதிருப்தியாக உள்ளனர்.

திமுக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம். விஜய் ஆட்சியை தவிர்த்து தற்போது உள்ள முன்னணி அமைச்சர்களை வைத்து தனி அணியாக செயல்படுவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது.

அதனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் அவர்கள் கொண்டு வருவார்கள் அதன் மூலம் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருவதற்கு உண்டான வாய்ப்பு உள்ளது இல்லை என்றால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு மீண்டும் தேர்தல் வரலாம்
அப்போது தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் மலரும்.

நாங்கள் குதிரை பேரரத்திலோ இந்த ஆட்சியை கவிழ்ப்பதோ செய்ய மாட்டோம்
தானாக இந்த ஆட்சி கவிழும். குதிரை பேரம் செய்யும் அளவிற்கு திமுகவில் யாருக்கும் பெரிய பண பலம் கிடையாது வெளியில் இருந்து யாராவது வேண்டுமானால் செய்யலாம்.

ஆனால் மக்களின் மனதை மாற்றக்கூடிய சக்தி திமுகவிற்கு உண்டு
இன்றைக்கு மக்களுடைய ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கண்டு தமிழக வெற்றிக்கான எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட முடிவு எடுத்ததாக தகவல் வந்துள்ளது.

அதனால்தான் எம்எல்ஏக்களை அடிக்கடி அழைத்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை இந்த அரசு குறைத்துக் கொண்டு வருகிறது
பல பேருக்கு கிடைக்க கூடாதபடி பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸில் விட்டு நாங்கள் வந்து விட்டோம் அவர்கள் எதற்காக எங்களை கூப்பிட போகிறார்கள். நாங்கள் காங்கிரஸ் ஓட எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

தமிழக மக்கள் திமுகவை தாங்கி பிடிக்க தயாராகிவிட்டனர்.

நாங்கள் எங்களுடைய சுமைகளை இறக்கி விட்டோம் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் அதிகாரிகளை மிரட்டி எங்களுக்கு தான் பணிகளை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ரசிகர் மன்றம் என்று செல்கின்றனர் நற்பணி மன்றம் என்று செல்கின்றனர் எம்எல்ஏக்கள் என்று சொல்கின்றனர். அதிகாரிகள் யாருடைய சொல்லை கேட்பது என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

வரம்பு மீறி அவர்கள் செயல்பட்டு வருகின்றனர் இது போன்று எந்த ஆட்சியில் நடைபெற்றது கிடையாது. இதனால் அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக மீது தொடர்ந்து ஆளும் தரப்பு செய்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் திமுக தான் என்று கூறுகின்றார். ஆறு மாதத்திற்குள் தமிழகம் எந்த அளவிற்கு சீரழிந்து உள்ளது என்று பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் ஆட்சியர் தலைமைச் செயலாளரிடமும் மத்திய அரசிடமும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எம்எல்ஏ மீது எடுக்கவில்லை. தற்போது மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது அவர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என் நம்பிக்கை உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகவும் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் இந்திய உள்துறை அமைச்சகம் தமிழக ஆளுநரை வரவழைத்து தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எம்எல்ஏ விவாதம் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் அந்த நம்பிக்கை உள்ளது.