விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் RAROVAH ENGINEERING PRIVATE Limited நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் தொம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கம்ப்யூட்டர்கள், டேபிள்கள், வேண்டுமென பள்ளியின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
அதன் பேரில் பள்ளிக்கு 3 கணினிகள் ,1 Printer,3 மேஜைகள் அரசு பள்ளி மாணவர்கள் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவரும், ஊழியர்களும் , தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அந்நிறுவனத்திற்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது
