• Tue. Nov 17th, 2026

பத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் அன்னதானத்தை தொடங்கி வைத்த எம் வி கருப்பையா எம்எல்ஏ..,

ByKalamegam Viswanathan

Nov 17, 2026

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு நடுக்காட்டு முத்தையா பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சமயநல்லூர் எஸ்வி வைரம் அருணா தேவி சுகவாசம் சிட்டி புரமோட்டர்ஸ் பவுண்டர் மற்றும் சுகந்தா கிருபானந்தம் மேனேஜர் டைரக்டர் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவண கண்ணன் சமயநல்லூர் கிளை செயலாளர் ஆறுமுகம் சேர்வை நிர்வாகி குமரவேல் பாண்டியன் கிளை செயலாளர் ரமேஷ் மாவட்ட துனைச் செயலாளர் அய்யனார் இணைச் செயலாளர் கம்பா மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு கோவில் திருப்பணி குழு சார்பில் மரியாதை செய்யப்பட்டது