• Sun. Nov 15th, 2026

குழந்தைகளின் மனிதநேயத்தை உண்டாக்கும் விதமாக உணவு திருவிழா..,

ByK Kaliraj

Nov 15, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளின் மனிதநேயத்தை உண்டாக்கும் விதமாக பள்ளியில் ஆரோக்கியமான உணவு திருவிழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ராஜு தலைமை வகித்தார், தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார், முதல்வர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

ஆரோக்கியமான பல்வேறு உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்தனர். விற்பனையின் மூலம் கிடைத்த தொகையினை சிவகாசி ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.