• Mon. Nov 16th, 2026

குழந்தைகள் தினத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் NO DRUGS வடிவில் அணிவகுப்பு..,

ByAjmalkhan saleemraja

Nov 15, 2026

தேனி மாவட்டம், போடியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒன்றிணைந்து NO DRUGS என்ற ஆங்கில வாசக வடிவில் அணிவகுத்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், போதைப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம், போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களைத் தடுத்து நல்வழிப்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, போதைப் பொருளுக்கு எதிராகவும், புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாரத்தான் போட்டி நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற NO DRUGS விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று போதைப் பொருளுக்கு எதிரான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் வான்வழி மற்றும் கழுகுப் பார்வை காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.