• Sun. Nov 15th, 2026

ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி!

BySeenu

Nov 15, 2026

மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் (பொறுப்பு) ரம்யா பாரதி, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

​ கோவை, மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையினரின் விரைவான சேவையை உறுதி செய்யவும் 34 புதிய ரோந்து வாகனங்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டன.

இதனுடன் இணைந்து, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்ட ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.

ஹோண்டா இந்தியா அறக்கட்டளையின் (Honda India Foundation) சமூகப் பொறுப்புணர்வு நிதியின் (CSR) கீழ் வழங்கப்பட்ட இந்த 34 புதிய வாகனங்களின் இயக்கத்தையும், ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியையும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் G. கிரியப்பனவர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IGP) மற்றும் கோவை மாநகரக் காவல் ஆணையர் (பொறுப்பு) ரம்யா பாரதி, கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ​ஹோண்டா இந்தியா அறக்கட்டளை இயக்க அலுவலர் ராஜீவ் தனேஜா ​ஆகியோர் இணைந்து கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகரக் காவல் துணை ஆணையர்கள் தங்கதுரை (வடக்கு), மகேஸ்வரன் (போக்குவரத்து), கார்த்திகேயன் (தெற்கு) மற்றும் ராஜ். கண்ணா (ஆயுதப்படை) உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

புதிய ரோந்து வாகனங்களின் மூலம் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “விபத்தில்லா கோவை – கோவையில் பூஜ்ஜிய விபத்துகள் (Zero Accidents in Coimbatore)” என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.