தமிழகத்தின் முன்னணி மருத்துவப் பரிசோதனை சேவை நிறுவனங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ், கோவையில் தனது பிராந்திய அளவிலான நவீன மருத்துவப் பரிசோதனை ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாக இந்த புதிய ஆய்வகம் அமைந்துள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நம்பகமான, துல்லியமான மற்றும் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் தொடக்க விழாவில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், கே.ஜி. மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் ஜி. பக்தவத்சலம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆய்வகத்தைத் தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது..
“தமிழகம் முழுவதும் எங்களது சேவைகளை விரிவுபடுத்தும் பயணத்தில் கோவையில் பிராந்திய ஆய்வகத்தைத் தொடங்குவது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
நவீன தொழில்நுட்பம், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் தரமான செயல்முறைகளை ஒருங்கிணைத்து, துல்லியமான மருத்துவப் பரிசோதனை சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கோவை மற்றும் அண்டை மாவட்ட மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே நம்பகமான பரிசோதனை சேவைகளை வழங்க இந்த ஆய்வகம் உதவும்” என்றார். கோவையில் புதிய பிராந்திய ஆய்வகத்தைத் தொடங்கியதன் மூலம், தமிழகத்தில் தனது சேவை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தி, மக்களுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை சேவைகளை அருகிலேயே வழங்கும் தனது நோக்கத்தை எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.