• Fri. Nov 13th, 2026

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி, 2026ஆம் ஆண்டு குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ஷேக்நபி குழந்தைகள் தின விழா வாழ்த்துக்களைத் தெரிவித்து, கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

விழாவிற்கு உதவித்தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குழந்தைகள் தின விழாவில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.