புதுக்கோட்டை மாநகர் அண்ணா சிலை அருகில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, தடுத்து நிறுத்தப்படாத போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கும்மியடித்து கோஷங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் மாவட்ட ம மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா முத்து மற்றும் புதுக்கோட்டை மேற்குமாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி மற்றும் முன்னாள் அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மையநாதன் தமிழகத்தில் முந்திய ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் தான் தற்போது ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்கள் அமைகிறது இனி வரும் காலங்களில் திமுக தான் முதல் இடத்தில் வெற்றி பெறும் என்று பேசினார். அமைச்சர் ரகுபதி பேசும் பொழுது நாங்கள் இந்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை S I R ஆள் தான் இந்த தோல்வியை கண்டது புதுக்கோட்டை மாவட்டத்தில் த வெ க எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அது திமுக அரசு கொண்டு வந்த திட்டமாகத்தான் இருக்கும் என்று பேசினார்.
தற்பொழுது கூட நவம்பர் இரண்டாம் தேதி புதுக்கோட்டை வரும் முதலமைச்சர் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை தான் திறந்து வைக்க வருகிறார். அதனால் அனைவரும் காலங்களில் திமுக தான் ஆட்சி புரியும் என்று பேசினார்.
