• Fri. Oct 30th, 2026

தவெக மாநில செய்தி தொடர்பாளருமான சௌந்திரராஜா, மாலை அணிவித்து மரியாதை..,

ByP.Thangapandi

Oct 30, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு நடிகரும், தவெக மாநில செய்தி தொடர்பாளருமான சௌந்திரராஜா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்திரராஜா.,

சாதி பார்ப்பவன் சண்டாளன் என்று சொன்னவர், எல்லா மக்களும் இன்புற்று, சமமாக இருக்க வேண்டும், எல்லா மக்களையும் மதிக்க வேண்டும் என சொன்னவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.,

அப்பேர்பட்ட தேசிய தலைவரை நாம் அவர்கள் கூறிய கருத்துக்களை இளம் தலைமுறையினர் பின்பற்றி வர வேண்டும்,

நீங்கெல்லாம் சின்ன பசங்க தேவர் ஐயா சொன்ன கருத்துகளை பின்பற்றுங்க follow பன்னுங்க, ரோட்டில் போகும் போதும், காரில் போகும் போதும் பாதுகாப்பா போங்க, இது கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும் நிகழ்வு, அவர் சொன்ன கருத்துக்களை பின்பற்ற தான் இது போன்ற குருபூஜை நடக்கிறது.,

என் அண்ணன் தம்பி, மாமன் மைத்துனர்கள், அக்கா தங்கச்சி எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள், அவரது வரலாறை மதித்து எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும், மனிதநேயத்தை போற்ற வேண்டும்.,

இந்த உசிலம்பட்டிக்கு தேவையான தேவைகளை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யும், உசிலம்பட்டி மண்ணின் மைந்தர் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களும் முதல்வரின் கவணத்திற்கு கொண்டு போய் கொண்டே தான் இருக்கிறார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வார்கள்.,

கை என்றால் கொடு என்று அர்த்தம், நமக்கு மேல் யாராவது சாதித்து சென்றால் மனதார கை தட்டி பாராட்டுங்கள், நமக்கு அருகில் யாராவது கஷ்டப்பட்டால் கை கொடுத்து தூக்கி விடுங்கள் என பேசினார்.,