கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள லூலு ஹைப்பர்மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பிரம்மாண்ட சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

இதில், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் லூலு கனெக்ட் பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மொபைல் போன்கள், எல்இடி தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தச் சலுகையில் இடம்பெற்றுள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புக் கேஷ்பேக் சலுகைகள், எளிய மாதத் தவணை வசதிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. லூலு கனெக்ட் பிரிவில் வாங்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவசமாக வீடு தேடி வழங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகளும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற பண்டிகை கால ஆடைகளும் சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நான்கு நாட்களுக்கு மட்டும் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




