முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளை, பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துள்ள தவெக எனும் ‘TN Branch Washing Machine’, முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்தும் ‘Vettri Vendetta Politics’ திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் தயாரிக்கவும், மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது என திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஆன ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.





