வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விளை நிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முத்தையா தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் . குணசீலி முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சேர்மன் வேளாண் காடுகள் வளர்ப்பு, அங்கக வேளாண்மை, நுண்ணீர் பாசனம், காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண்மை தொடர்பாக விளக்கி கூறினார்.
மேலும் இந்த முகாமில் இரசாயன உரங்களை சமச்சீராக பயன்படுத்துதல் , நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை, பயிர் பல்வகை படுத்துதல், ஊடுபயிர் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம், விவசாயிகள் திறன் மேம்பாடு, வேளாண் இயந்திரமயமாக்கல், பயிர் கழிவு மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மண்வளம் மற்றும் மண் ஆரோக்கிய மேலாண்மை, விவசாயிகள் அடையாள அட்டைகளை உருவாக்குதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாகவும் பேசினார்.

இதில் வெம்பக்கோட்டை சுற்று வட்டார வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளார்கள் . மாரிராஜ் மற்றும் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் நன்றி கூறினார்.




