• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தேனியில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்..,

ByAjmalkhan saleemraja

Oct 29, 2026

தேச விரோத சதிக்கு துணை போகும் தேச விரோதிகளை கண்டித்தும் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தியும் தேனியில் பாஜக சார்பில் மாபெரும் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பாஜகவினர் இந்த தேசியக்கொடி பேரணியில் கலந்து கொண்ட நிலையில் இந்த பேரணியை பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்து அவர்களுடனே ஊர்வலமாக நடந்து சென்றார்.

தேனி நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணி பெரியகுளம் சாலை வழியாக நேரு சிலை வந்தடைந்து பங்களாமேடு பகுதியில் முடிவடைந்தது.

“ஜனநாயகம் காப்போம்” “அராஜகத்தை அழிப்போம்” என்ற கோஷங்களை எழுப்பியவாறு கையில் தேசியக்கொடி ஏந்தி சுமார் 2000க்கும் மேற்பட்ட பாஜகவினர் பேரணியாக சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன்,

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேசிய தேர்தல் ஆணையத்தால் நடைபெறும் வழக்கமான பணி ஆனால் காங்கிரஸ், கரப்பான் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து “எஸ்ஐஆர்” சீர்திருத்தம் பாஜகவிற்கு சாதகமாக நடைபெறுகிறது என்று ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய்களை உடைப்பதற்காக நாடு முழுவதும் இதுபோன்ற தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.