• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம்: தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Oct 27, 2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகள் தப்பிய சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்,

பின்னர் அங்கிருந்து உடனடியாக தேனி சிறைச்சாலைக்குச் கார் மூலம் புறப்பட்டு சென்றனர்.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை மற்றும் வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது சிறையில் இருந்து தப்பியோடிய 17 பேர்களில் 4 கைதிகள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக சிறைத்துறை டிஜிபி சந்திப்பு ரத்தோர் வருகை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.