• Mon. Oct 26th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் மஞ்சள் கலர் கொடியுடன் கிரிவலம் செல்ல அனுமதி மறுப்பு போலீஸ்..,

ByKalamegam Viswanathan

Oct 26, 2026

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் மாநில அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கிரிவலம் செல்வதற்காக கோவில் முன்பு திரண்டனர்.

அப்போது, முருகன் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் கலர் கொடியுடன் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை என திருப்பரங்குன்றம் கோவில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தெரிவித்ததார்

இதையடுத்து, கிரிவலம் செல்ல வந்த இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சிக் கொடிகள் அல்லது அமைப்புகளின் கொடிகளை எடுத்துச் செல்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றாலும், முருகனின் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் கலர் கொடியை எடுத்துச் செல்வதில் என்ன சர்ச்சை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய இந்து முன்னணியினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், முருகன் கொடியுடன் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்காவிட்டால், அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் இந்து முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில், கிரிவலப் பாதையில் சுற்றி வர அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து முன்னணியினர் கிரிவலம் சென்றனர்.

முருகன் கொடியுடன் கிரிவலம் செல்ல வந்த இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.