• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கம்!

BySeenu

Oct 22, 2026

​கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.எச். மருத்துவமனை இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி தலைமை தாங்கி பேசுகையில், பெண்களுக்கு இடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கே.எம்.சி.எச். மார்பக புற்றுநோய் மையத்தில் ஆலோசனை வழங்குவது முதல் முதல் பரிசோதனை, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வரை உலகத்தரம் வாய்ந்த சிறந்த நிபுணர்களும், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களும் ஒரே இடத்தில் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சரஸ்வதி கலந்து கொண்டு பெண்களுக்கான மார்பக விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். இதில் கே.எம்.சி.எச். மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறும்போது, இந்த கையெழுத்து இயக்கம் மற்றும் எங்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் இந்நோய் குறித்த பயத்தைப் போக்கி, ஒவ்வொரு பெண்ணும் வழக்கமான பரிசோதனைகளுக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.