புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1,384 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அவருக்கு இங்கு உள்ள அனைத்தும் தெரியும், எங்களையெல்லாம் இங்கே அழைத்து வந்து களத்தில் நிற்க வைத்து வெற்றி பெறப் போகிறார். வெற்றி மட்டுமல்ல தளபதிக்கு பின்னால் இன்று பணியாற்ற போகிறார் என்று கூறினார்,…

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,…
விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் களம் காண்பது என்று சொன்னால் தொகுதிக்குள் களம் காண்பது என்று அர்த்தம். வெற்றிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் என்ற அர்த்தத்தில் தான் நான் பேசினேன். அதையும் இதையும் சேர்த்து கோர்த்து விட்டு விடாதீர்கள்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஒரே தொகுதியில் பெண்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் மாற்றப்பட வேண்டும் தொகுதியை சீரமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளதே தவிர அச்சத்தின் காரணமாக இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை. முதலமைச்சர் விஜய் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முதலமைச்சர் விஜய் டபுள் ஸ்டாண்டில் இல்லை கொள்கை ரீதியாக நிற்கிறார். மக்கள் நலன் காண்பதற்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

வடகிழக்கு பருவ மழையை பொறுத்த வரை சூப்பர் எல்நினோ என்று சொல்லப்படுகின்ற காரணத்தால் மாற்றங்கள் உருவாகும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லி வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை காணலாம். நேபாளில் நடைபெற்றது இதுவரையும் கண்டிராத சேதத்தை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழைகொட்டி தீர்த்துள்ளது. இந்த பருவமழையை பொறுத்தவரை நவம்பர் மாதத்திற்கு பிறகு எல்நினோ நிலை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் இயற்கையை வெள்ள யாராலும் முடியாது இயற்கையில் இருந்து மக்களை பேணி காப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மூன்று மாத காலமாக ஒவ்வொரு துறையின் சார்பில் எடுத்து வருகிறார். குறிப்பாக சென்னை மாநகரத்தை 15 மண்டலங்களாக பிரித்து ஏழு அமைச்சர்களை அதற்காக உருவாக்கி 18 ஐஏஎஸ் அதிகாரிகளை அதற்காக பணிய அமர்த்தி சென்னை மாநகரத்தில் இயற்கை பேரிடரால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பின்தங்கி விடாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை விமான நிலையம் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து எந்த ஒரு கருத்தும் தற்போது சொல்ல இயலாது.
சென்னையில் கடந்த கால ஆட்சியில் முடிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால் பணிகள் 70 சதவீதம் மட்டும் தான். ஒரு வீடு கட்டி முடித்த பிறகு கூரை போடவில்லை என்றால் ஒழுகுமா? ஒழுகாதா? கட்டிடம் எழுப்பி விட்டு கூரை போடவில்லை என்றால் கட்டிடம் ஒழுகும் அதே போல கால்வாய் இணைக்கின்ற பணியில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் துறையாக இந்த துறை இருப்பதால் வேகமாக விரைவாக இந்த பணியை நிறைவேற்றி காட்டியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் போதை பொருள் கடத்திய வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு இயற்கை பேரிடர் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அதே நேரத்தில் இயற்கை பேரிடர் வருகின்ற போது மக்களை எப்படி காக்கலாம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். அதனால் சாதாரண இடத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள்.
நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அது மக்கள் தீர்ப்பு என்று கூறினார்…



