மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகே பேயத்தேவர் என்பவரின் தோட்டத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சீமானூத்து மலை வனப்பகுதியில் இருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்தது லேசான காயம் ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை நிலை அலுவலர் கருப்பையா தலைமையிலான தீயணைப்பு த் துறை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த ஆண் புள்ளிமானை லேசான காயத்துடன் பத்திரமாக மீட்டனர்.,

அதனைத் தொடர்ந்து மீட்கப்பட் புள்ளிமானை வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.,



