• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இரவு , பகலாக பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்..,

Byp Kumar

Oct 12, 2026

தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவானது பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் , வாகன ஓட்டுகள், திரையரங்குகள், வணிகர்கள், வியாபாரிகள் , கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்கும் கல்விக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆயுத பூஜை விழாவிற்கு ஆண்டுதோறும் தங்களின் வாழ்வாதாரத்தை தரக்கூடிய உபகரணங்களை வைத்து அவைகளுக்கு பூ மற்றும் சந்தனம், குங்குமம் வைத்து தலை வாழ இட்டு தேங்காய், வாழைப்பழம், பழம் வகைகள் கொண்டு பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்தாலும் அவைகளின் முக்கிய அம்சமாக பூஜையில் இடம் பெறுவது இந்த பொரி மட்டுமே ஆயுத பூஜை என்றவுடன் அனைவரும் நினைவுக்கும் வருவது பொரி இந்த பொரியானது திண்டுக்கல்லில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு ஆயுத பூஜை விழாவிற்கு பருவமழை காரணத்தால் 10 டன் முதல் 15 பொரிகள் மட்டுமே உற்பத்தி செய்து கொடுத்த நிலையில் தற்பொழுது இந்த ஆண்டு ஆர்டர்கள் திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் குவிந்து வருவதால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 10 டன் பொரிகள் கூடுதலாக கிடைத்துள்ளன. எனவே 25 டன் பொரிகள் உற்பத்தி செய்யும் பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

என்றும் இங்கு தயாரிக்க கூடிய பொறிகள் கரூர் , ஈரோடு ,திருப்பூர் , கோவை ,திருச்சி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறோம் . சென்ற ஆண்டு 90 லிட்டர் கொண்ட ஒரு மூட்டை பொரி 420 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் உயர்ந்து 470 ரூபாய்க்கு விற்பனையானாலும் வியாபாரிகள் அதிக அளவில் ஆர்டர்கள் கொடுத்து வருவதால் இந்த ஆண்டு 25 டன் பொரி தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றோம் என்று தொழிலாளர்களும் , உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .