• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ் பி தேவநாதன் கலந்துரையாடல்..,

ByKalamegam Viswanathan

Oct 12, 2026

அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர் நலன் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்ட எஸ்.பி.தேவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் இளைஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கு வந்த இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினர்.

இதில் எஸ்.பி. தேவநாதன் பேசியதாவது,

இப்பகுதியில் வந்து இளைஞர்களிடம் நேரில் பேசியது சந்தோஷமாக உள்ளது.
நான் பதவியேற்ற பின் முதல் முறையாக இப்படி ஒரு கூட்டம் நடத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் ஜல்லிகட்டு சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடிவீரர்களாக தான் இருப்பீர்கள்.

தற்போதைய சூழலில் இளைஞர்கள் மதுபோதை பழக்கத்தால் தகராறில் ஈடுபட்டு அதன் மூலம் பழிக்கு பழியாக தொடர் பிரச்சனைகள் வருகிறது. இதனை குறைக்க தற்போது காவல்துறை சார்பில் சீரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், இவர்களை விளையாட்டு துறையில சிறந்து விளங்கவைத்து அதன் மூலம் அவர்களை நல்வழி படுத்த தற்போது நான் முயற்சி செய்கிறேன்.

விளையாட்டுகளில் ஈடுபட விளையாட்டு மைதானம் அமைத்து தரவும் பல்வேறு வகையான குரூப் தேர்வுகளிலும் வெற்றி பெற போதுமான விழிப்புணர்வுகள், பயிற்சி வகுப்புகள் வழங்கி Sports மூலம் சிறந்து விளங்க நான் முயற்சி எடுக்குறேன் எனக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் எங்களுடன் சேர்ந்து பயணிக்கவும், மாவட்டத்தை முன்மாதிரியாக மாற்றுவேன் என்றும் நான் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து தற்போது காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றேன்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் நான் நேர்மையாக பணியாற்றி உள்ளேன்,
அமைச்சர் , MLA என யாரையும் பார்க்க மாட்டேன் அமைச்சர்கள் மீதே பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளேன், யாருக்கும் நான் அடிபணிய மாட்டேன்.
நான் லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்கவும் அனுமதிக்க மாட்டேன்.
இந்தப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் லோக்கல் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் அவர் மீது நம்பிக்கை இல்லையா, DSP நம்பரில் பேசி புகார் அளிக்கவும், அவர் மீதும் நம்பிக்கையில்லையா SP யான எனக்கு தகவல் வாட்சப்பில் தெரிவியுங்கள்.

யார்மீது தவறு இருந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் இவ்வாறு கூறினார்,
பெரும்பாலான இளைஞர்கள் விளையாட்டு மைதானம் வேண்டும் என கேட்டு கொண்டதன் பேரில் மைதானம் அமைத்து தந்து காலை, மாலை உடற்பயிற்சி செய்ய நான வழிகாட்டியாக செயல்படுவேன் என பேசினார்.

அப்போது இளைஞர் ஒருவர் எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இல்லை ஆனால் மதுபாட்டில் தாரளமாக கிடைக்கிறது, இதனால் எனது சகோதரி கடைக்கு தனியாக செல்ல முடியவில்லை அச்சப்படுகிறார் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை நான் புகார் அளித்தால் என் மீதே வழக்கு பதிவு செய்ய முயல்கிறார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இது குறித்து தனிப்படை அமைத்துள்ளேன் சட்டவிரோத மதுவிற்பனை இனிமேல் இப்பகுதியில் நடைபெறாது என்பதை நான் உறுதியளிக்கிறேன் என SP தேவநாதன் பேசினார்.