• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவையில் தனிஷ்க் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி..,

BySeenu

Oct 11, 2026

கோவை தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தொடங்கியது. அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண்களுக்கான பிரத்யேக நகை வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

சுமார் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், பாரம்பரிய தங்க நகைகள், குந்தன், போல்கி, நவரத்தினம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோயில் வடிவமைப்புகள், மலர் மற்றும் மயில் உருவங்கள் கொண்ட பாரம்பரிய நகைகளுடன், நவீன வடிவமைப்பிலான கழுத்தணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களும் இடம்பெற்றுள்ளன. திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற நகைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் டி. சந்திரசேகர் கூறுகையில், தமிழகத்தின் திருமண மரபுகளையும், இன்றைய மணப்பெண்களின் விருப்பங்களையும் இணைக்கும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வாடிக்கையாளர்களுக்குப் பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் முதல் முறையாக நடைபெறும் இக்கண்காட்சி மூலம், திருமண நகைகளின் பல்வேறு தொகுப்புகளை வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டுத் தேர்வு செய்யலாம்.