• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர காவல்துறையினர் போதை மாத்திரைகள் கடத்திய வழக்கில் இருவர் கைது..,

ByKalamegam Viswanathan

Oct 10, 2026

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ரோந்து அலுவலில் இருந்த காவல்துறையினரை கண்டதும் இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற சந்தோஷ் குமார் (23) மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (26) ஆகிய இரண்டு நபர்களையும் துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்து விசாரணை செய்த போது,

அவர்களிடமிருந்து விற்பனைக்காக வாங்கி வரப்பட்ட 940 போதை மாத்திரைகள், வாள் 01, செல்போன்கள் -02, மற்றும் Yamaha MT இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். எதிரிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்ய உதவிய காவல்துறையினருக்கு மதுரை மாநகர காவல் சார்பாக, மாநகர காவல் ஆணையர் திரு. S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.