• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏழாம் ஆண்டு விழா

தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பெருமாள், இணை செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் திருவரங்கப் பெருமாள் வரவேற்றார். பொருளாளர் அருஞ்சுனனக் கண்ணன் அறிக்கை வாசித்தார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன், செயலாளர் ராஜ்குமார், மாநில தலைவர் விக்கிரமராஜா, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, தி.மு.க., வடக்கு மாவட்ட பொருளாளர் தங்கதமிழ் செல்வன், எம்.எல்.ஏ., க்கள் சரவணக்குமார், ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
தீர்மானங்கள்:
வைகை அணையை தூர்வார வேண்டும். தங்க நகைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும், நூல் மற்றும் ஜவுளிக்கு உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.