தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

இதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெற்றிய உறுதிப்படுத்தியதுடன் பல்வேறு இடங்களில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் விருதுநகர் மாவட்ட மத்திய செயலாளர் சின்னப்பர் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்சேர்ந்த கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான ஒன்று கூடி வெற்றி முழக்கமிட்டு பட்டாசு வெடித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாலையில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தங்களது வெற்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இருசக்கர வாகனம் ஓட்டிகள் மற்றும் கார் பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றி கழகத்தினர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.





