• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சி.ஐ.சி.எஸ்.சி பள்ளிகளுக்கான தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டி..,

ByPrabhu Sekar

Oct 8, 2026

ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சி.ஐ.சி.எஸ்.சி பள்ளிகளுக்கான தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தாம்பரத்தை தனியார் பள்ளி
9 ம் வகுப்பு மாணவன் பிரனில் சுந்தரராஜன் 17 வயது கீழ் 45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்,

ம.பி, கர்நாடக, உ.பி மாநிலங்களை சேர்ந்த டேக்வாண்டே வீரர்களுடன் போட்டியிட்டு தங்கம் வென்ற நிலையில் ரெயில் மூலம் சென்னை திரும்பிய அவருக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்,

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரனில் சுந்தரராஜன்:- ஆறு ஆண்டுகளாக டேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு இரண்டுமுறை முயன்ற நிலையில் இந்த முறை தங்கம் வென்றதாகவும், மேலும் தமிழ்நாடு அரசு விளையாட்டுக்கு ஊக்கப்படுத்தும் நிலையில் உள் விளையாட்டு அரங்கு அமைத்து கொடுத்தால் சர்சதேச போட்டியில் பங்கேற்க ஊக்கமளிக்கும் என்றார்,

பயிற்சியாளர் விஜயராகவன் பேசும்போது:- ஒலிம்பிக் அங்கீகாரம் உள்ளதால் டேக்வாண்டோ விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது, இந்த விளையாட்டு ஒரு ஒழுக்கத்தை முன்னிருத்தி விளையாட கூடியது இளைஞர்கள் நல்ல ஆர்வமும் உடல் திறனை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு உள் அரங்கங்கள் அதிகரிக்க மாநில அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.