மதுரை சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்து பழுதடைந்த நிலையில் சாலையின் நடுவே திடீரென நின்றதால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்த அவலம் அரங்கேறியது போக்குவரத்து துறையில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம், உள்ளனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர் இந்த நிலையில் சோழவந்தான் அடுத்து டாஸ்மாக் கடை அருகில் பேருந்து சென்ற பேருந்து திடீரென நடு ரோட்டில் நின்று விட்டது இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர். பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து கிளம்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என ஓட்டுநரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்தை சரி செய்த பிறகு தான் இயக்க முடியும் ஆகையால் அனைவரும் கீழே இறங்கி அடுத்து வரும் பேருந்தில் செல்ல கூறியதாக கூறப்படுகிறது இதனால் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி நடுரோட்டிலும் சாலையின் ஓரங்களிலும் அமர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்த அவலம் அரங்கேறியது.

போக்குவரத்து துறையில் பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதால் பேருந்துகள் நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது ஆகையால் பழுத டைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




